வாரியார் அமுதம் இதழின் முகப்பு
சந்தா,விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி:

வாரியார் அமுதம்,
47, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை – 600024

வாரியார் அமுதம்

வாரியார் சுவாமிகளின் புகழ் என்றும் வளர்பிறையாக இருக்கவும், அவரது எழுத்துக்களை நில மக்களுக்கு நினைப்பூட்டவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் “வாரியார் அமுதம்’ என்னும் ஆன்மீக மாத இதழ் . இந்த இதழ் வாரியார் சுவாமிகள் நடத்திய திருப்புகழமிர்தத்தின் அடியொற்றி வருவது. இரண்டாண்டுகளாக வெளிவரும் வாரியார் அமுதத்தின் பதிப்பாசிரியர் திரு.சு.மயிலப்பன் அவர் கள் .இவர் வாரியார் சுவாமியின் தமக்கைப் பேரனும் திரு. கோடிலிங்கத்தின் மருமகனுமாவார். தாத்தாவின் நினைவைத் தாரணியோர் போற்ற வேண்டும் என்ற மயிலப்பனின் தாளாத ஆசையே வாரியார் அமுதமாக வடிவெடுத்து வருகிறது. வாரியார் அமுதத்தின் ஆசிரியர் தருமபுரி புலவர் . க.தியாகசீலன் ஆவார் . இளமைக் காலத்திலிருந்தே சுவாமிகளுடன் இரண்டறக் கலந்து விட்டவர். சுவாமிகளின் எழுத்துப் பணிகளுக்குத் துணையிருந்தவர் . வாரியார் அமுதம் ஆண்டுக்கு ஒரு சிறப்பு மலரை வெளியிடுகிறது. இதன் தொண்டு தொடர் வாரியார் சுவாமிகளின் அன்பர்கள் சந்தாதாரர்களாகச் சேர்ந்து, மற்றவர்களையும் சேர்த்துத் தர வேண்டப்படுகிறார்கள்.

ஆண்டுச் சந்தா ரூ.120