உலகை உய்விக்க இறைவன் தன் அருட்பிரவாகத்தினை வெளிப்படுத்த அவ்வப்போது ஞானிகளை அவதரிக்கச் செய்கின்றான். வாழையடி வாழையென வந்த அந்தத் திருக்கூட்ட மரபில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் அவதரித்தவர் தாம் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர் கள்.

அவரது அவதாரம் பக்தியைப் பரப்பியது; வைதிக நெறியை வாழ வைத்தது; அருணகிரி நாதரின் திருப்புகழை அகிலம் அறிய வைத்தது; தனி மனித ஒழுக்கத்தைத் தாங்கிப் பிடித்தது. அனைத்துக்கும் மேலாக மனிதனை மனிதனாக வாழ வைத்தது.

பக்தி, ஒழுக்கம் ,நினைவாற்றல், கருணை, பரந்து பட்ட நூலறிவு முதலியவற்றின் முற்றுகையில் மூழ்கியவரே நம் வாரியார் சுவாமிகள் .

பிறப்பிடம்

பண்டைய புகழ் வளர்க்கும் தொண்டை வள நாட்டில் சேலாரும் வயல் சூழும் பாலாற்றங்கரை யோரம் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரே. வாரியார் சுவாமிகளைப் பெற்றெடுத்த பெருமைக்குரியது. இது வேலூர் மாவட்டத்தில் வேலூாருக்கும் காட்பாடிக்கும் இடையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது.

அவதாரம்

25-08-1906 சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணிக்குச் சுக்ல பட்சம் சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் சுப்பிர நாமயோகம் கௌலவ கரணம், துலா ராசி, கடக லக்கினத்தில் அவதாரம்.

திருப்புகழ்ச் சாமிகள்

இளமை காலம்

பின் னாளில் தந்தையைப்போல் சமய நெறியைப் பரப்ப சுவாமிகள் 195ல் திருவருள் தவநெறி மன்றம் என்ற நிறுவனத்தை நிறுவி சமய வளர்ச்சிக்குச் சொந்தச் செலவில் பிரசாரர்களை நியமித்துப் பக்திப் பயிர் வளர்க்கச் செய்தார். தாயார் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையார் பெலன் குலம் போற்றும் பெருந்தெய்வம்; பொறுமையின் பூஷணம்; கணவனாரின் கண்ணைசைவுக்குக் கட்டுப்பட்ட கற்பின் கலங்கரை விளக்கம். செங்குந்த வீர சைவ மரபில் உதித்த இத்தம்பதியருக்குப் பதினோரு மக்கட் செல்வங்கள்.

விடலைப் பருவத்தில் வீணை பயிற்சி
வாலிப முகட்டில்

அவர்களில் நான்காமவ ராக நம் சுவாமிகள் அவதரித்தார். சுவாமிகளின் குடும்பம் ஆதிநாளில் வறுமை வயப்பட்டிருந்தது.

சுவாமிகளின் தாயாரின் தாயார் வீடு கர் நூலில் இருந்தது. அங்கு அஷ்டமா சித்தி கைவரப் பெற்ற குருபலம் என்ற ஞானி ஒருவர் இருந்தார். அவர் கற்பூரக் கட்டியைத் தங்கக் கட்டி யாக்கியவர். அவரிடம் வாரியார் சுவாமிகளின் பாட்டியார் பாலம்மாள் தன் மருமகனான மல்லையதாசரை அழைத்துச் சென்று அவருக்குத் தங்கக் கட்டி வாங்கித் தர நினைத்தார்

 

இந்த குறிப்பை ஞான திருஷ்டியால் உணர்ந்த குருபலம். “நான் கொடுக்கும் தங்கக் கட்டி வாழ்நாள் முழுக்க வருமா. என்னைப் போன்ற ஒருவன் வயிற்றில் வந்திருக்கின்றான். அவனால் வீடெல்லாம் தங்கமாகும்” என்றார். அந்தக் குருபலத்தின் கூற்றுப்படி அவதரித்தவர் தாம் நம் வாரியார் சுவாமிகள் .

வாழ்க்கைத் துணைவி அமிர்தலட்சுமியம்மாள்
தீபாராதனை காட்டும் திருப்புகழமிர்தம்

கல்வி: பள்ளி சென்று படிக்கவில்லை . தந்தையாரே குருவாகி, கல்வி, இசை, இலக்கிய இலக்கணம் கற்பித்தல்.

3வது வயதில் எழுத்தறிவு தொடக்கம். 5வது வயதில் தாமே நூல்களை எடுத்துப் படிக்கும் ஆற்றல். 85வது வயதில் செவகன் பாப்பாடும் கவன் சுமை. 12 வது வயதில் பதினாயிரம் பாடல் கள் மனனம். கற்றறிந்த புலவர்க்கே கடினமா ன அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியன இயற்றல்.

5 வது வயதில் திருவாள் காமாலையில் வீர சைவ குல நெறிப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம்.

தந்தையாரால் சடக்கர மந்திர உபதேசம். திருப்புகழ்ச் சாமியால் சூக்கும சடக்கர மந்திரோபதேசம் பெறல். காசிவாசி எசைவ சித்தாந்த மதறாமதேராபாத்தியாய சைவசமய சரபம் பழநி சிவபார் ஈசான சிவாச்சாரிய சுவாமிகளால் நிர் வா ண தீட்சை பெறல். “வாம தேவ சிவம்’ என்ற தீட்சா நாமம் பெறுதல்.

தமது இளமைக் காலத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளைத் தரிசித்தல்; பின்னொருகால் கனவில் சடக்கர உபதேசம் பெறல்.

மதுரைத் திருப்புகழ்ச் சுவாமிகள் என்று வழங்கப்பட்ட பிரம்மஸ்ரீ லோகநாத ஐயர் அவர்கள் 1919 ல் மதுரை ஆடி வீதியில் திருப்புகழ்ச் சபையை நிறுவினார். வாக்குச் சித்தியுள்ள இவரிடத்தில் சில தினங்கள் மட்டுமே வாரியார் சுவாமிகள் திருப்புகழ் பாடங்கேட்டார். “உனக்கு எல்லாம் வரும்” என்று நம் சுவாமிகளை ஆசிர் வதித்து அனுப்பினார். பின்னாளில் திருப்புகழாகவே வாரியார் சுவாமிகள் திகழ்ந்தது அனைவரும் அறிந்ததுதானே.

அன்பு மகன் கோடிலிங்கம் குடும்பத்தினருடன்

அந்தச் சிலநாள் பாடங்கேட்டதன் நன்றிக் கடனாக 25 ஆண்டுகள் குருநாதரின் குடும்ப நிர்வாகத்தைச் சுவாமிகள் மேற்கொண்டார்.

பிரசங்கத்தில் பிரபலமான வாரியார் சுவாமிகள் வீணை வாசிக்கும் வித்வத்தையும் விட்டு வைக்கவில் லை. ஆனைகவுனி பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் சில ஆண்டுகள் வீணை பயின்றார். அதன் பயனாக பேனா பிடித்த அவரது விரல்கள் வீணா கானத்தையும் விளைத்து நின்றன.

திருமணம் : தமது தாய் மாமாவின் மகளான அமிர்த லட்சுமியை 19 வது வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருவள் ளுவர் போன்ற ஞானிகளைத் “தந்தையே’ என்றழைக்கும் புண் ணியம் செய்த உயிர்கள் இல்லாததால்

அவர் கட்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை. அதே நிலைதான் நம் சுவாமிகட்கும்.

திருப்புகழமிர்தம் : 1936ம் ஆண்டில் ஆரம்பித்த மாத வெளியீடு. இதில் ஒரு திருப்புகழ் விரிவுரை, கற்புக்கதை, கந்தரலங்காரம் போன்றவற்றிற்கு உரை , பிற அறிஞர் களின் கட்டுரைகள் அமைந்திருந்தன. 37 ஆகக் டுகள் வாரியார் சுவாமிகள் ஆசிரியராக இருந்து திருப்புகழ் அமிர்தத்தை வெளியிட்டு வந்தார்கள் .

முருக வழிபாடு

1936ல் முருக வழிபாட்டைத் தொடங்கினார். தாம் குகசாயுச்சிய நிலை பெறும்வரை 57 ஆண்டுகள் ஒரு நாளும் இடைவிடாது வழிபாடு செய்து வந்தார். வழிபாடு செய்யாமல் நீரும் பருக நினைத்ததில்லை . சுவாமிகளின் வாழ்நாளில் குளிக்காத நாளோ பூஜை செய்யாத நாளோ இல்லை.

திரைப்படத் துறை

தேவர் ஃபிலிம்சில் வெளிவந்த துணைவன், திருவருள், தெய்வம் மேலும், மிருதங்க சக்ரவர்த்தி, சண்முகப்ரியா, நவக்கிரக நாயகி மற்றும், கந்தரலங்காரம் முதலிய திரைப்படங்களில் பங்கேற்றுள்ளார் . இன்னும் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “சிவகவி” என்ற படத்துக்குத் மூலக்கதை அமைத்துத் தந்துள்ளார் .

உடம்பெடுத்த பயன் ஊருக்குழைத்தல் என்றபடி “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் குறளுக்கு உதாரண மாகிக் காலத்துக்கும் மக்களுக்காக உழைத்தார் ; மக்கள் நலத்தை நீத்தார் ; மக்கள் நலத்தைப் போனார் . இப்படிப் பயனுற வாழ்ந்து ஆயிரம் பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்த நித்திலமான நம் வாரியார் சுவாமிகள் பஞ்சபூத சாட்சியாகப் பரிகானமித்தவர் .

அதனால்தான் மகன் கணில் அவதரித்து 07.11.1993 ல் ஆயில்ய நட்சத்திரத்தில் விண்ணில் கலந்தாரோ?

புலவர்கள் வாழ்த்து

திருமலையாண்டிக் கவிராயர் வாழ்த்து

தி.வை. திருமலையான்டிக் கவிராயர் 1947க்கு முன்பு பாராட்டியது. அப்போது கவிராயருக்கு வயது 86 .

திருப்புகழ்ஜங் கரன் செயலால் பன்னூலின் கடல்கடந்து
சமய வாதி
மறுப்புகழைத் தூள் படுத்தி நூற்கடலின் மருந்துதவி
மாந்தர் ஒழார்
கருப்புகழை நோய் மாற்றும் அருணகிரி நாதர் மொழி
கற்கான் நீறும்
திருப்புகழின் அமிழ்தகிரு பானந்த வாரியென்றும்
செயலால் வாழ்க.

கவியோகி சுத்தானந்த பாரதியாரின் வாழ்த்து

நீண்டுயர்ந்த  பொன்மேனி நீண்டகாக்கும் பொன் மணிவாய்
யாண்டும் புகழும் இனியநகை – பூண் டொளிரும்
வாரியார் வாய்வன்ணம் வண்டமிழ் வள்ளலாம்
பாரியார் கைவண்ண பாங்கு.

கி.வா.ஜகந்நாதரின் வாழ்த்து

வேரிக் கடம்பனருள் வீறுகிரு பானந்த
வாரியார் தம்சரிசதை மக்களுக்கு – நேரியதாம்
நல்ல அமுதம் வழிகாட்டி ஞானநெறி
சொல்லும் கதையெனவே சொல்.

Lorem ipsum dolor sit amet, consecte sed diam nonummy.

Lorem ipsum dolor sit amet, consecte sed diam nonummy.

Lorem ipsum dolor sit amet, consecte sed diam nonummy.

Lorem ipsum dolor sit amet, consecte sed diam nonummy.
s
s

Tom Davidson

Photographer

s

Lory Mc Eisley

PR manager

s

Sally Forrest

Consultant

s

Fiona Endley

Copywriter