வாரியார் சுவாமிகளின் சமுதாயப் பணிகள்

ஏழைக்கு  உதவுதல் , எளியவர்களைத் தாங்குதல், இல்லாமை போக்க இயன்றவரை ஈதல், வாழ்வின் இலையுதிர் காலத்தில் இருக்கும் வயோதிகர்களுக்கு அவர்கள் எந்த மத, எந்த இனமாக இருந்தாலும் உண்ண , உடுக்க, உறங்க வசதி செய்து தரல் முதலிய சமுதாயப் பாரிகளை அன்றாடக் கடமையாக்கிக் கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மாரிமுடி பதித்தது போன்ற பரிதான் திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடிலுக்கு நிதி சேர்த்துதவியது. தம் வாழ்வின் பெரும் பகுதியைக் குடிலுக்கே அர்ப்பளித்து விட்டார். 365 தாய் தந்தையற்ற குழந்தைகளுக்குப் புகலிடம் தரும், போதி மரமான இராமகிருஷ் னா குடிலுக்குப் பெரும் நிதி சேர்க்கப் பிரயாசைப் பட்டார். இதற்கென்று தமிழகம் முழுதும் சென்று வசூலித்தார். ஒரு குழந்தைக்கு 5000 ரூபாய் வீதம் சேகரித்து 27 லட்ச ரூபாயை வைப்பு நிதியாக்கினார் .


எத்தனையோ திருப்பணிகள்  செய்திருந்தாலும் வாரியார் சுவாமிகள் இராமகிருஷ் லசா குடிலுக்குச் செய்த தொனன் டைத்தான் சிலாகித்துக் கொள் போர். தமது இறுதிக் காலத்தில் குடிலில் சென்று தங்கி விடுவதாகவும் கூறியிருந்தார். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழலைப் குடில் ஆண்டுவிழா. அதில் குடில் பிள்ளைகள் கூட அமர்ந்து பஜானா பாடி மகிழ்வார். அந்த அம்மாவுக்குக் குடில் அவர் உள்ளத்தில் குடியேறி விட்டது.

தஞ்சை மேல் அலங்கத்தில் முருகன் ஆசிரமத்தை உருவாக்கினார். தவத்திரு T.P.கோவிந்தசாமி அவர்கள் மூலம் ஆசிரமத்தில் மக்களுக்கு அன்னதானம் , 600வத்தியம் முதலியன நிகழக் காரணமாகி நின்றார். எனவேத்தியத்திலும் மந்தரித்தலிலும் தேர்ந்த தவத்திரு கோவிந்தசாமி அவர்கள் வாரியார் சுவாமியின் உத்தம் சீடர்களில் ஒருவர்.

 

தஞ்சையில் இராஜராஜ சமய சங்கத்திற்குச் சொந்தக் கட்டிடம் அமைய நிதி வசூலித்துத் தந்தார் .

 

திருநெல்வேலியில் தாமிரசபையின் வளர்ச்சிக்கு நிதி வசூலித்துத் தந்தார்.

 

வடலூரில் 0.P.ராமசாமி ரெட்டியார் நடத்திய குரு குலத்தின் வளர்ச்சிக்கு உதவினார்.

 

சென்னை பொருளாதாரத் தொண்டு மன்றத்திற்கு ரூ.25,000 வழங்கினார்.

 

சென்னை வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜ வளர்ச்சிக்கு நிதி வசூலித்து உதவினார்.

வாரியார் சுவாமிகளின் கல்விப் பணிகள்

பொரியார் சுவாமிகளின் குறிக்கோளில் முக்கியமானது, யாரேனும் ஒருவர் மருத்துவத்துக்கோ, திருமானத்துக்கோ, கல்விக்கோ உதவி கேட்டால் மறுக்காது உதவுவது. எகான்னாற்ற கர கழை மாணவர்கள் கல்வி நலம் பெறக் காணாக்கற்ற பொருளை மாதந்தோறும் வழங்கி வருவார். ஒரு மாசமா வர் 3.3.L.C படிக்க உதவி கேட்டு அது அப்படியே தொடர்ந்து கல்லூரிப் படிப்புதவி எங்கோ நீண்டது. பின்னர், பேன்சில் பொங்கித் தந்தார் . பின் திருப்போம் செய்து வைத்தார். சொந்த வீடு கட்டிக் கொள்ளவும் உதவி செய்தார். இத்தனைக்கும் அவர் இன் னாரென்று அறிந்ததே இல்லை. இப்படிப் பல்லோர் உதவி பெற்றுள்ளனர்.

 

ஒவ்வோர் ஆண்டின் மே, ஜூன் மாதங்களில் தமிழகத்து அனைத்துப் பகுதிகளிலிருந்தும் படிப்புதவி கேட்டுக் கடிதங்கள் வரும். பாடநூல் வாங்க, சீருடை தைக்க, பள்ளிக் கட்டணம் கட்ட என்று பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை அனுப்பி 50வப்பார். தாம் அவதரித்த காங்கேய நல்லூரில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மகளிர் உயர் நிலைப் பள்ளி, ஆசான்கள் மேனிலைப் பள்ளி என்று ஏற்படுத்தியுள்ளார்.

 

பல ஊர்களில் கல்விச் சாலைகள் அமைக்கக் காரணாமாக இருந்திருக்கின்றார். தருமபுரி குமாரசாமிப் பேட்டையில் தம் பெயரால் ஆரம்பித்துள் ள உயர்நிலைப் பள்ளிக்கு 1,34,500 ரூபாய் நிதி திரட்டித் தந்துள்ளார். அதில் தம் பங்காக முதலில் 10,000 ரூபாய் வழங்கியிருக்கின்றார் .

 

திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லுாரி மற்றும் மேனரினலப் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வசூலித்துத் தந்தார்.

 

விடியங்காடு தொடக்கப்பள்ளி உயர் நிலைப்பள்ளி , மேனரிலைப்பள்ளி முதலியனா அடைய உதவினார்.

 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தனக்கோட்டி நடுநிலைப் பள்ளிக்கு 1974ல் வகுப்பறைகளும் திறந்தவெளி அரங்கும் அமைத்துத் தந்தார் . | 1992ல் ரூ.10,000 வழங்கினார்.

 

சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மகளிர் மேனிலைப்பள்ளிக்கு ரூ.10,000 வழங்கியுள்ளார்.

 

காங்கேயநல்லூரில் | 1954 – 55ல் நடுநிலைப்பள்ளf கனகவல்லி கல்வி நிக்கரப்பத்திற்கு ரூ.30,000 உதவியுள்ளார்.

1962 உயர் நிலைப்பள்ளியாக்கல் 2 ஏக்கர் நிலம் வாங்கி விளையாட்டுத்திடல் அமைத்தல் 1981ல் மேனிலைப்பள்ளியாக்க நிதியளித்தல். மேலும் வகுப்பறைகள் கட்ட ரூ.5,00,000 வழங்கல் 1985-1986 மகளிர் உயர்நிலைப்பள்ளி அமைத்தல் | 1986ல் முத்துவிழா நினைவுப் பிரார்த்தனைக் கூடம் ரூ.2,00,000 செலவில் அமைத்துத்தந்துள்ளார்.

 

திருமுருக கிருபானந்த வாரியார் பொது நல நிதி அறக்கட்டளை (பதிவு)

 

இந்த அறக்கட்டளை சுவாமிகளின் செய்தவத்தால் உருவானது. முழுக்க முழுக்க தம் சொந்த வருவாயில் உருவாக்கிய இவ்வறக்கட்டளையின் நிதி, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, கணவனை இழந்தவர்களுக்கு, கல்விக்கு, மருத்துவத்துக்குப் பயன்பட்டு வருகிறது இந்த அறக்கட்டளை மூலம் படித்துயர் ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் நல்ல நிலைமையில் உள் ளலார் .ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்று உபதேசம் செய்து நின்று விடாமல் ,வாரியார் சுவாமிகள் தம் வாழ்விலும் கடைப் பிடித்துக் காட்ட உருவாக்கியதுதான் இந்தப் பொது நல நிதி.

 

இந்த நிதியிலான நிர்வகிக்கும் பொறுப்பைத் தாக்குப்பின் திரு.ம.கோடிலிங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்று சுவாமிகள் சாசனம் செய்துள்ள காளார். அதுபடியே கோடிலிங்கம் அவர்கள் நேரிய முறையில் இதன நீர் வகித்து வருகின்றார் . இந்த நிதி வளர்ச்சியடைந்தால் இன்னும் பல கர நிகழ்காளப் பராமரிக்க முடியும். ஆதலினா’, அருள் உள்ளம் கொண்டவர்கள் சுவாமிகளால் ஏற்படுத்திய இந்தப் பொது நல நிதிக்கு உதவக் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

 

நினைவாலயம்: காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமிகள் சிற்றில் இழைத்துச் சிறுபறை முழக்கிச் சிறுதேர் உருட்டிய பின் களைப் பருவத்திலிருந்து வளர்ந்த வீட்டை நினைவாலயமாக்கியுள்ளனர் .சுவாமிகள் பெற்ற பட்டங்கள், அவர் பயன்படுத்திய பொருள் கள் ,அவர் படித்த- எழுதிய நூல்கள் நினைவாலயத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள் ளன . திருமுருக கிருபானந்த வாரியார் பொது நல நிதிக்கமிட்டி இந்த நினைவாலயத்தைப் பராமரித்து வருகிறது.

 

 

திருமுருக கிருபானந்த வாரியார் பொது நல நிதி.
புதிய எண்:132 சிங்கன் கன தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002.
தொலைபேசி: 853 56 66