1956-ல் திருப்புகழ்ச் சபை

திருப்புகழைத் திசையெங்கும் பரப்பவும், சைவம் வையத்தில் வேரூன்றவும் திருக்கோயில்கள் வழிபாடுகளில் திளைத்தோங்கவும் வாரியார் சுவாமிகள் செய்துள்ள தொண்டு ஒரு வரையறையில் அடங்காது. திருமடங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளை ஒரு தனி மனிதராக நின்று நிறைவேற்றியதை நினைத்துப் பார்க்கும் போது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் நம் சுவாமிகள் என்று எண் ணொ வேண்டியுள்ளது. வெறும் காலட்சேபம் செய்து காலத்தை ஓட்டாது, சீலத்தை மக்கள் மனத்தில் செலுத்திப் புனித வாழ்வில் அவர்களைப் புகுத்தி, புது உலகம் படைத்தவர் நம் சுவாமிகள் . தாம் அவதரித்த நாளில் திருப்புகழ்ச் சபை ஒன்றை நிறுவி அதன் மூலம் பற்பல அறுப்பாளிகள் சந்திர சூரியர் சஞ்சரிக்கும் வரை நிரந்தரமாய் நடக்க நிபந்தங்கள் அமைத்துள்ளதை அதுவும் சுய வருமானத்தில் தோற்றுவித்துள் ளதைப் படித்தறியும்போது நம்முள் ளும் தொகக் டுகர்வு துளிர்ப்பதை உணரலாம். தாம் அமைத்த திருப்புகழ்ச் சபையின் நோக்கங்களைப் படித்தாலே நம் கண்கள் பனிக்கும். பழுதிலா அந்த மாணிக்கத்தின் மனதில் பதியம் போட்டிருந்த கருத்துக்கள் எதிர்காலக் குருத்துக்களுக்கு ஒரு கவசமாக விளங்கும். அந்த நோக்கங்கள் அடியில் வருமாறு:

முருகன் திருவருள் துணை கொண்டு ஆங்காங்குள்ள திருத்தலங்களிலும், பிற நபர்களிலும் திருப்புகழ்ச் சாபை நிறுவித் திருப்புகழை ஓதியும் ,ஓதுவித்தும் சிவ நெறியைப் பரப்புதல் சமய உணர்வு உலகெங்கும் மிளிரும் பொருட்டுத் திருப்புகழ் முதலிய நூல்கள் ,மொழி பெயர்ப்புகள் செய்தித் தாள்கள் முதலிய வெளியீடுகளைத் தமிழிலும் பிற மொழிகளிலும் இலவசமாகவும், அடக்க விலையிலும் வெளியிடுதல், விற்றல். சமய உணர்வு உண்டாகுமாறு இக்கரிது பேசுதற்குரிய விரிவுரையாளர்களைப் பயிற்றுவித்து, மதியம் நல்கியோ நாதியம் இன்றியோ சமயப்பணி செய்தல், செய்வித்தல்.

மெய்யடியார்களின் திருநாட்களையும் சிறப்பாக அருணகிரிநாதர் திருநாளையும் கொண்டாடுதல், கொண்டாடச் செய்தல். இச்சபையின் முன்னேற்றத்திற்காக நன்கொடைகள் பெற்றுக் கொள்ளல், இச்சபையின் நீதியை

சர்ச்சிக்காக அல்லது குறித்த ஒரு நோக்கத்தின் வளர்ச்சிக்காக யாராவது இனாமாகவோ நிபந்தனையுடனோ வழங்கப்பெற்ற பொருள்களையும் சொத்துக்களையும் ஆட்சி கொண்டு நடத்தல். இச்சபையின் நிதியைச் சரியான பெறுமதியுள் ள ஈடுகளிலும் சொத்துக்களிலும் போட்டு வைத்தல். தாவர சங்கம சொத்துக்கள் வாங்கப் பயன் படுத்தல். இன்னும் இச்சபையின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணையான எல்லாக் காரியங்களையும் செய்தல், செய்வித்தல்.

சுவாமிகள் திருப்புகழ்ச்சபைக்கு கஎன் று பல லட்ச ரூபாய்களை வைப்பு நிதியாக வாங்கியில் போட்டுள்ளார்.